அபாரமான ஆட்டத்தில் போராடி தோற்றது பங்களாதேஸ் | வென்றது இந்தியா

2 years ago
SPORTS
aivarree.com

பங்களாதேஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி டக்வர்த் லூயிஸ் முறைப்படி 5 ஓட்டங்களால் வென்றது.

இந்தப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றதுடன் விராட் கோலியும், கே. எல். ராகுலும் அரைச்சதங்களை கடந்தனர்.

185 என்ற வெற்றியிலக்கை நோக்கி பங்களாதேஸ் துடுப்பாடிய போது மழை குறுக்கிட்டதால் 16 ஓவர்களில் 151 ஓட்டங்கள் தேவை என்ற இலக்கு டக்வர்த் லூயிஸ் முறைப்படி நிரணயிக்கப்பட்டது.

பங்களாதேஸ் அணி சிறப்பாக விரட்டியடித்த போதும், அதனை இந்திய அணியின் பந்துவீச்சாளர்களால் 16 ஓவர்களில் 145 ஓட்டங்களுடன் மட்டுப்படுத்த முடிந்தது.

ஆட்ட நாயகனாக விராட்கோலி தெரிவு செய்யப்பட்டார்.