அடுத்த போட்டியில் சஞ்சு சம்சன் இல்லை

1 year ago
SPORTS
aivarree.com

இலங்கை அணிக்கு எதிரான எஞ்சிய 2 20க்கு20 போட்டிகளிலும் இந்தியாவின் விக்கட் காப்பு துடுப்பாட்டக்காரர் சஞ்சு சம்சன் விளையாடமாட்டார்.

மும்பையில் நடைபெற்ற முதலாவது 20க்கு20 போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த போது அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து அவர் அடுத்த இரண்டு போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக ஜிட்டேஸ் ஷர்மா இணைக்கப்பட்டுள்ளார்.