VAT வரி அதிகரிப்பு சட்டமூலம் பாராளுமன்றில்

2 years ago
Sri Lanka
aivarree.com

பெறுமதி சேர் வரியை (VAT) அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் வியாழக்கிழமை பாராளுமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. 


இதற்கான அனுமதியைப் பாராளுமன்ற நிதிபற்றி குழு வியாழக்கிழமை வழங்கி இருந்தது.


இதன்படி நிதிசார்ந்த சேவை வழங்கலுக்கான பெறுமதி சேர் வரி 15 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக அதிகரிக்கப்படவுள்ளது. 


மேலும் பெருந்தொற்று மற்றும் அவசரக் காலத்தின் போது அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார அமைச்சுக்கு வழங்கப்படும் நன்கொடைகளுக்கான பெறுமதி சேர் வரி (VAT) நீக்கப்படவுள்ளது. 


பாராளுமன்றில் இது நிறைவேற்றப்பட்டால் கடந்த ஜனவரி மாதம் 1ம் திகதி முதல் இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்ததாகக் கருதப்படும்.