வர்த்தக வங்கிகளில் டொலர் பெறுமதி

7 months ago
aivarree.com

கடந்த வெள்ளிக்கிழமையுடன் (27) ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி கண்டுள்ளது.

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.18 ரூபாவிலிருந்து 320.67 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 331.91 ரூபாவிலிருந்து 332.41 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 320.16 ரூபாவிலிருந்து 320.49 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330.50 ரூபாவிலிருந்து 331.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கி : கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 322 ரூபாவாகவும் 332 ரூபாவாகவும் உள்ளது.