‍முதல் மதிப்பாய்வில் IMF உடன் பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டிய இலங்கை

7 months ago
aivarree.com

சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்களும் இலங்கை அதிகாரிகளும் விரிவாக்க நிதி வசதிக்கான முதல் மதிப்பாய்வில் பணியாளர் அளவிலான உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

இது இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கு மிகவும் அவசியமானது.

அதேநேரம், IMF இன் நிர்வாக குழு ஒப்புதல் அளித்த பிறகு இரண்டாவது தவணையான இலங்கை 330 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெறும்.

இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ஷேஹான் சேமசிங்க,

சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான முதலாவது மீளாய்வு தொடர்பான பணியாளர் உடன்படிக்கையானது பொருளாதார ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கியமான தருணமாகும் – என்றார்.