ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி

7 months ago
aivarree.com

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது இன்று (19) சிறிதளவு வீழ்ச்சி அடைந்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய விபரங்களின்படி,

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு, விற்பனை பெறுமதி முறையே 319.29 ரூபாவாகவும், 329.11 ரூபாவாகவும் உள்ளது.

நேற்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு, விற்பனை பெறுமதி முறையே 318.92 ரூபாவாகவும், 329.54 ரூபாவாகவும் காணப்பட்டது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய நாட்டு நாணயங்களுக்கு நிகராக ரூபாவின் பெறுமதி ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.