ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி

7 months ago
aivarree.com

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (23) சிறிதளவு வீழ்ச்சி கண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர்வ நாணய மாற்று விபரங்களின்படி,

அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 320.32 ரூபாவாகவும், 331.00 ரூபாவாகவும் காணப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (20) அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி முறையே 319.64 ரூபாவாகவும், 331.00 ரூபாவாகவும் காணப்பட்டது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய பிரதான நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி இன்று ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது.