CBSL இன் உத்தியோகபூர்வ நாணய மாற்று விபரம்

12 months ago
Sri Lanka
aivarree.com

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (01) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

அதன்படி, டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி இன்று 283.87 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 297.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி நேற்று 287.87 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 300.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதனிடையே, 2023 மே 31 வரையான காலப் பகுதியில் அமெரிக்க டொலருக்க நிகராக இலங்கை ரூபாயின் பெறுமதி 22.9 சதவீதம் அதிகரித்து இருந்தது.

மேலும் இதே காலப்பகுதியில் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றுக்கு எதிராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்தமையும் குறிப்பிடத்தக்கது.