2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்பான புதிய அப்டேட்!

11 months ago
SPORTS
aivarree.com

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் மூன்றாவது சீசன் (2023-2025) தொடர்பான அறிவிப்பினை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

இந்த தொடரானது இங்கிலாந்து அணிக்கும் நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான மோதலுடன் ஆரம்பமாகவுள்ளது.

அதன் இறுதிப் போட்டி எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு லண்டன், லோரட்ஸில் நடக்கும்.

2023 ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை வென்றதில் அவுஸ்திரேலியா இன்னும் மகிழ்ச்சியாக இருக்கலாம், ஆனால் எதிர்வரும் ஜூன் 16 அன்று பரம எதிரியான இங்கிலாந்துக்கு எதிரான மோதலில் தொடங்கும் அடுத்த WTC தொடருடன் தங்கள் ஆதிக்கத்தை தொடர்ந்தும் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அதன்படி, ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடருடன் 2023-25 ​ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஆரம்பமாகும்.

2023-25 ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 27 தொடர்களில் திட்டமிடப்பட்ட 68 போட்டிகள் நடைபெறும்.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகியவை WTC 2023-25 ​​தொடரில் பங்கேற்க உள்ள ஒன்பது அணிகள் ஆகும்.

இந்த ஒன்பது அணிகளும் WTC 2023-25 ​​தொடரில் தலா ஆறு தொடர்களில் விளையாடும். அவற்றில் மூன்று உள்ளூரிலும் மற்றும் மூன்று வெளியூரிலும் இடம்பெறும்.

WTC 2023-25 ​​தொடரில் இலங்கை அணி நியூஸிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுடனான தொடர்களை உள்ளூரிலும், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளுடனான தொடர்களை வெளியூரிலும் எதிர்கொள்ளும்.

Image