2023 ஆஷஸ் டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்!

11 months ago
SPORTS
aivarree.com

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் மிகவும் எதிர்பார்க்கப்படும் தொடரான ஆஷஸின் 73 ஆவது சீசன் இன்று (16) வெள்ளிக்கிழமை இங்கிலாந்து மற்றும் அவுஸ்கிரேலிய அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகிறது.

இது டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகவும் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க போட்டியாகும்.

அதன்படி, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க 2023 ஆஷஸ் டெஸ்ட் தொடர் எட்ஜ்பாஸ்டனில் இன்று தொடங்குகிறது.

கிரிக்கெட் மேலாதிக்கத்திற்கான பரபரப்பான போரில் இரு நாடுகளும் மோதும்.

எட்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கிண்ணத்தை வெல்லும் முனைப்பில் உள்ள இங்கிலாந்து, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் உலக டெஸ்ட் சாம்பியன்களான அவுஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.

ஐந்து வெவ்வேறு மைதானங்களில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டெஸ்ட் போட்டிகள் நடத்தப்படும்.

இருப்பினும், இங்கிலாந்தின் பாரம்பரிய மைதானங்களில் ஒன்றான டிரென்ட் பிரிட்ஜ் எந்த ஆட்டத்தையும் நடத்தாது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியில் இங்கிலாந்துக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமை தாங்குவார், அவுஸ்திரேலியாவை பேட் கம்மின்ஸ் வழிநடத்துவார்.

அவுஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் கிரிக்கெட்டில் பழமையான இரண்டு நாடுகள்.

இருவரும் 356 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளனர். இங்கிலாந்து 110 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, அதேசமயம் அவுஸ்திரேலியா 150 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இரு நாடுகளும் 72 ஆஷஸ் தொடர்களில் விளையாடியுள்ளன. அதில் அவுஸ்திரேலியா 34 முறையும், இங்கிலாந்து 32 முறையும் வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.