வருகிறது புதிய மின்னுற்பத்தி நிலையம்

1 year ago
Sri Lanka
aivarree.com

உமா ஓய மின்னுற்பத்தி நிலையத்தின் பணிகள் அடுத்த ஆண்டு ஜுன் மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் கஞ்சன விஜயசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.

உமாஓய கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதன்போது இந்த பணிகள் அடுத்தாண்டு ஏப்ரல் மாத இறுதியில் நிறைவடையும் என்றும், அங்கிருந்து உற்பத்தியாகும் மின்சாரம், ஜுன் மாதம் தேசிய மின்னோட்டத்துடன் இணைக்கப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.

குறித்த மின்னுற்பத்தி நிலையத்தில் இருந்து 120 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.