இலங்கையிலேயே சுத்தமான காற்று நுவரெலியாவில்

1 year ago
Sri Lanka
aivarree.com

இலங்கையின் வளிமண்டல மாசு நிலைமை தொடர்பாக அண்மைக்காலமாக முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களில் உடல் ஆரோக்கியத்துக்கு கேடான மட்டத்தில் வளிமண்டல மாசு உள்ளது.

வளியின் மாசு வளித்தர சுட்டெண் அடிப்படையில் கணிக்கப்படுகிறது.

100-150 வரையில் வளி தர சுட்டெண் நிலவுகின்ற இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடுவது சிறார்கள், முதியவர்கள், சுவாச மற்றும் இருதய கோளாறு உள்ளவர்களுக்கு ஆபத்தாகும்.

இந்த சுட்டெண் அடிப்படையில் நுவரெலியா மாவட்டத்திலேயே ஆகக்குறைந்த வளி மாசு நிலவுகிறது.