ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி!

11 months ago
aivarree.com

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று (ஜூன் 12) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (09) உடன் ஒப்பிடுகையில்,

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 285.14 ரூபாவிலிருந்து 288.06 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 302.01 ரூபாவிலிருந்து 305.11 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 286.04 ரூபாவிலிருந்து 288.02 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 301 ரூபாவிலிருந்து 303 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 288 ரூபாவிலிருந்து 290 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 300 ரூபாவிலிருந்து 302 ரூபாவாக உயர்ந்துள்ளது.