ஜீவன் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி கிடைப்பதில் சிக்கல்

2 years ago
Gossip
aivarree.com

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் இந்த வாரம் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் நீர் வழங்கல்துறை அமைச்சராக பதவி ஏற்கவிருந்தார்.

ஆனால் அவருக்கு நீர்வழங்கல்துறை அமைச்சுப் பதவியை வழங்குவதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது.

இதனால் புதிய அமைச்சுப் பதவிகளை வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக பிற்போடப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்னும் 10 அமைச்சர்கள் வரையில் நியமிக்கப்படவுள்ள நிலையில், அவற்றை தங்களது கட்சிக்கே வழங்க வேண்டும் என்பதில் மொட்டுக் கட்சி விடாபிடியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.