சியான் விக்ரமை சந்தித்த – தல தோனி

2 years ago
Infotainment
aivarree.com

கிரிக்கெட்டில் தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி நடிகர் சியான் விக்ரமை சந்தித்துள்ள படம் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

2022ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் ஏலம் தொடர்பாக ஆலோசனை செய்ய தோனி அண்மையில் சென்னை சென்றிருந்தார். 

இந்த நிலையில் சென்னைக்குச் சென்றிருந்த மகேந்திர சிங் தோனி, நடிகர் சியான் விக்ரத்தைச் சந்தித்துள்ளார். 

கடந்த முறை மகேந்திர சிங் தோனி சென்னை சென்றிருந்த போது நடிகர் விஜய்யை சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.