சபாநாயகர் கையொப்பமிட்டால் ஜனாதிபதிக்கு பதவி இல்லாமல் போகும் 

2 years ago
Gossip
aivarree.com

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22ஆம்  திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் ஜனாதிபதிக்கு  நிதியமைச்சர் பதவி இல்லாமல் போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேற்படி சட்டமூலத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்று உள்ளது .

அதன் பிரிவு 44 (3) இன் படி, ஒரு அமைச்சுக்கு ஒருவர் நியமிக்கப்படவில்லை என்றால் ஜனாதிபதி அந்த அமைச்சின் செயல்பாடுகளை 14 நாட்களுக்குப் பொறுப்பேற்க முடியும் என்று உள்ளது .
எனினும் தற்போது ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக நிதியமைச்சர் பதவியையும் வகிக்கின்றார்.

எனவே 22ஆம்  திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டதன் பின்னர் அவரிடம் உள்ள நிதி அமைச்சு இல்லாமல் போகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.