கிழக்கில் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமா?/ மறுக்கிறார் மாகாண பணிப்பாளர்

2 years ago
Sri Lanka
aivarree.com

கிழக்கு மாகாணத்தில் பொதுப்போக்குவரத்தில் பயணிப்போர் திங்கள் முதல் கொவிட் தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமென தகவல் வெளியாகி இருந்தது.

வெளி இடங்களுக்கு பிரவேசிக்கும்போது தடுப்பூசி அட்டையை எடுத்து செல்லுமாறு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்துள்ளார் என செய்தி வெளியாக்கப்பட்டது.

ஆனால் இது உண்மையில்லை எனவும், தாம் அவ்வாறான அறிவுறுத்தல் எதனையும் விடுக்கவில்லை எனவும் அவர் அய்வரி செய்திகளுக்குத் தெரிவித்தார்.

ஆனால் கிழக்கில் பல இடங்களில் தடுப்பூசி அட்டைகள் சோதிக்கப்படுவதாக எமது செய்தித் தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும் மார்ச் இறுதியில் நாடுமுழுவதும் தடுப்பூசி அட்டை கட்டாயப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.