உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லே பார்டி 6-0, 6-1 என்ற நேர்செட்டில் லெசியா சுரென்கோவை 54 நிமிடங்களில் வீழ்த்தி ஒஸ்ட்ரேலிய பகிரங்க தொடரில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆஷ்லே பார்டி தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வென்றுள்ளார்.
விம்பிள்டன் சாம்பியனான பார்டி அடுத்ததாகத் தகுதிச் சுற்றில் இத்தாலியின் வீராங்கனை லூசியா ப்ரோன்செட்டியை எதிர்கொள்கிறார்.