ஒகஸ்ட்டில் நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றம் – நிதி இராஜாங்க அமைச்சர்

11 months ago
Sri Lanka
aivarree.com

நாட்டின் சந்தை இயல்பு நிலைக்கு வர இன்னும் சில மாதங்கள் ஆகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய மற்றும் எதிர்கால நிலை குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள அவர்,

  • எதிர்காலத்தில் கடன் அடிப்படையில் பொருளாதாரத்தை உருவாக்க முடியாது.
  • அதனால்தான் எல்லாவற்றுக்கும் பொருந்தக்கூடிய பேரண்டப் பொருளாதாரக் கொள்கையை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்.
  • இதில் நாம் காணவேண்டியது என்னவெனில், நாட்டில் எண்ணெய், மின்சாரம், எரிவாயு போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்குவது இன்று சாதாரணமாகிவிட்டது.
  • அடுத்தது அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, தற்போது விலைவாசி உயர்வு நின்று விட்டது.
  • அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஆனால் பணவீக்கம் குறைவதை ஒப்பிடுகையில், அது வேகமாக குறையவில்லை.
  • ஆனால் இவ்வளவு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்த ஒரு நாட்டில், சாதாரண சந்தைப் பொருளாதாரத்தை உருவாக்க இன்னும் சில மாதங்கள் ஆகும்.
  • எதிர்வரும் ஒகஸ்ட் மாதத்திற்குள் பணவீக்கத்தை ஒற்றை இலக்கத்திற்குக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.