எமிரேட்ஸுக்கு எதிராக 355 ஓட்டங்களை குவித்த இலங்கை

11 months ago
SPORTS
aivarree.com

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை அணி 355 ஓட்டங்களை குவித்துள்ளது.

இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு சிம்பாப்வேயின் புலவாயோவில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முதலில் பந்து வீசுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கையின் ஆரம்ப வீரர்கள் நால்வரும் அரை சதங்களை கடந்தனர்.

பத்தும் நிஸ்ஸங்க 57 ஓட்டங்களையும், திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும், குசல் மெண்டீஸ் 78 ஓட்டங்களையும் மற்றும் சதீர சமரவிக்ரம 73 ஓட்டங்களையும் பெற்றனர்.

இவர்களுக்கு மேலதிகமாக சரித அசலங்க 48 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 23 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 355 ஓட்டங்களை பெற்றது.

இதன் மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு வெற்றி இலக்காக 356 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.