உலக கிண்ண தகுதி போட்டி ; எமிரேட்ஸை இன்று எதிர்கொள்ளும் இலங்கை

11 months ago
SPORTS
aivarree.com

2023 ஐசிசி ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றின் மூன்றாவது போட்டி இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே இன்று ஆரம்பமாகவுள்ளது.

இந்த ஆட்டம் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 12.30 மணிக்கு சிம்பாப்வேயின் புலவாயோவில் ஆரம்பமாகிறது.

முன்னாள் உலகக் கிண்ண சாம்பியனான இலங்கை, முன்னதாக இரண்டு ஒருநாள் ஆட்டங்களில் UAE-ஐ எதிர்கொண்டது.

இந்த இரண்டு போட்டிகளிலும், இலங்கை அணியினர் வெற்றி பெற்றனர்.

இறுதியாக 2008 ஆம் ஆண்டு லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 142 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்கடித்தது.

ஒருபுறம் தசூன் ஷனக்க தலைமையிலான இலங்கை சமீபத்தில் ஆப்கானிஸ்தானை இருதரப்பு ஒருநாள் தொடரில் 2-1 என தோற்கடித்தது.

மறுபுறம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சமீபத்தில் மேற்கிந்தியத்தீவுகளிடம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியடைந்தது, பயிற்சி போட்டிகளிலும் தடுமாறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.