இன்றைய வானிலை முன்னறிவிப்பு

11 months ago
Sri Lanka
aivarree.com

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

– மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (12) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

– சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

– வடமேற்கு மற்றும் மத்திய மாகாணங்களில் இடைக்கிடையில் மழை பெய்யும். 

– ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

– மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுகளில் வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.  

– இடியுடன் கூடிய மழை பெய்கையில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.