இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து

1 year ago
World
aivarree.com

இந்தோனேசியாவின் மெராபி எரிமலை சனிக்கிழமை வெடித்துள்ளது.

இதனால் உண்டான அனல் மேகம் சுமார் 7 கிலோ மீட்டர் வரை வான் நோக்கி எழுந்ததாக அந்நாட்டின் அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஒரு அறிக்கையில் தெரிவித்தது.

இந்தோனேசியாவின் யோக்யகர்த்தா பகுதியில் அமைந்துள்ள எரிமலையே அந்நாட்டு நேரப்படி சனிக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் வெடித்துச் சிதறியுள்ளது.

எரிமலையை அண்மித்த பகுதியில் உள்ளவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

2,963 மீற்றர் உயரம் (9,721 அடி) கொண்ட மெராபி இந்தோனேசியாவின் மிகவும் செயல்திறன் கொண்ட எரிமலைகளும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.