இந்திய பிரதமருடன் பீட்டர்சன் சுவாரஸ்யமான கலந்துரையாடல்

1 year ago
SPORTS
aivarree.com

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கெவின் பீட்டர்சன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாடியுள்ளார்.

புது டெல்லியில் நடைபெற்ற “தி ரைசினா உரையாடல்” (The Raisina Dialogue) நிகழ்வில் கலந்து கொண்டபோதே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பீட்டர்சன் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதுடன், அதில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் சீட்டா வகை சிறுத்தைகளை இந்தியாவில் மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து பெருமிதம் அடைவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிறுத்தைகள் பாதுகாக்கும் திட்டத்திற்கு நம்பமுடியாத பாதுகாவலராக இருந்ததற்கு நன்றி என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் மோடியுடன் நடந்த சந்திப்பில், உங்களது புன்னகை மற்றும் நீங்கள் அளித்த உறுதியான கைகுலுக்கல் எப்போதும் நினைவில் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

மூன்று நாள் தி ரைசினா உரையாடல் நிகழ்வுக்காக சிறப்பு விருந்தினராக இந்தியாவுக்கு அழைக்கப்பட்டிருக்கும் பீட்டர்சன் முன்னதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்துள்ளார்.

பீட்டர்சன் கிரிக்கெட் தவிர வனவிலங்குகளைக் காப்பாற்றுவதிலும் பாதுகாப்பதிலும் தீவிரமாகப் பங்கேற்கிறார் மற்றும் ஆப்பிரிக்காவில் காண்டாமிருகங்களைக் காப்பாற்றும் திட்டத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.