சீரற்ற வானிலையால் வௌ்ளம் ஏற்படும் அபாயம்

1 month ago
Sri Lanka
aivarree.com

நிலவும் மழையுடனான வானிலையினால் ஆறுகளை ஒட்டிய தாழ்நிலப் பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதி தீவிர மழையுடன் புறநகர் பகுதிகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மழையின் தீவிரம் மற்றும் அளவைப் பொறுத்தே வெள்ளத்தின் வலிமை மற்றும் அபாயம் தங்கியுள்ளது என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு இன்று (18) மாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்தார்.

இதேவேளை, கடும் மழையினால் பாறைகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழும் அபாயம் காரணமாக நேற்று (17) இரவு 8.00 மணி முதல் தற்காலிகமாக மூடப்பட்ட எல்ல – வெல்லவாய பிரதான வீதி இன்று காலை 06.00 மணி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.