இந்தியன் பிரீமியர் லீக் (IPL) ஏலம் / கேள்விகளும் பதில்களும்

2 years ago
SPORTS
aivarree.com

இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் (IPL) ஏலம் சனி, ஞாயிறு தினங்களில் இடம்பெறவுள்ள நிலையில், அதுகுறித்த கேள்விகளும் பதில்களும்.

IPL 2022 ஏலம் எப்போது நடைபெறும்?

IPL 2022 பிரமாண்ட ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் நடைபெறுகிறது.

IPL 2022 ஏலம் எங்கு நடைபெறும்?

IPL 2022 ஏலம் பெங்களூருவில் நடைபெறுகிறது.

எந்த நேரத்தில் தொடங்குகிறது?

IPL 2022 ஏலத்தின் நேரடி ஒளிபரப்பு ஃபெப்ரவரி 12 ஆம் திகதி (சனிக்கிழமை) காலை 11 மணி முதல் (IPL) தொடங்குகிறது.
இது ஃபெப்ரவரி 13 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அதே நேரத்தில் தொடங்கும்.

IPL 2022 ஏலத்தை டிவியில் லைவ் ஸ்ட்ரீமிங்கை எப்படி, எங்கே பார்ப்பது?

IPL 2022 ஏலம் ஃபெப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய திகதிகளில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரலையில் நடைபெறும்.

IPL 2022 ஏலத்தை ஒன்லைனில் நேரடியாகப் பார்ப்பது எப்படி?

ஏலத்தின் நேரடி ஒளிபரப்பு Disney+ Hotstar இல் பார்க்கலாம். ஐபிஎல் 2022 ஏலத்தின் அனைத்து சமீபத்திய செய்திகள் Aivarree.comஇல் தரப்படும். எமது TWITTER மற்றும் FACEBOOK பக்கங்களிலும் தரப்படும்

ஏலத்தில் எத்தனை அணிகள் பங்கேற்கும்?

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் இணைந்ததன் மூலம் ஐபிஎல்லில் உள்ள மொத்த அணிகளின் எண்ணிக்கை 10ஐ எட்டியுள்ளது. ஐபிஎல் ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்கும்.

ஏலத்திற்கு எத்தனை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்?

590 கிரிக்கெட் வீரர்கள் – 355 அறிமுகவீரர்கள்.