அரச நிறுவனங்களை மறுசீரமைப்பது கட்டாயம் | CBSL ஆளுநர்

2 years ago
Sri Lanka
aivarree.com

அரச நிறுவனங்களை உடனடியாக மறுசீரமைப்பு செய்வதே நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முக்கியமானது என மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.

2023 வரவு செலவுத் திட்டம் தொடர்பாக மத்தியவங்கியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

அங்கு அவர் தெரிவித்த சில கருத்துகள்.

  • நெருக்கடியிலிருந்து மீள வேண்டுமானால், ஏற்றத்தாழ்வுகளின் மூல காரணங்கள் குறித்து அவதானம் செலுத்த வேண்டும்.
  • அரசாங்கம் அதிக வருவாயை வசூலிக்க வேண்டும் – செலவினங்களைக் குறைக்க வேண்டும்.
  • மேலும் இறையாண்மைக் பிணைகளின் நிலையான அளவை பராமரிக்க வேண்டும்.
  • இதன் விளைவாக, பணவியல் கொள்கை, பரிவர்த்தனை விகிதக் கொள்கை மற்றும் வெளிப்பாய்ச்சல் கணக்குகளுக்கு பேரண்ட பொருளாதார அலகில் ஒரு சாதகத்தன்மை ஏற்படும்.
  • அடுத்த கட்டம், அனைத்து அரசுக்கு சொந்தமான நிறுவனங்களையும் மறுசீரமைப்பு செய்வதாகும்.
  • பொருளாதார வளர்ச்சிக்கு அவை எவ்வாறு பங்களிப்பு செய்யலாம் என ஆராயப்பட வேண்டும்.
  • நாட்டின் பொருளாதாரத்திற்கு அரச நிறுவனங்கள் ஒரு பொறுப்பாகவும் செலவாகவும் இல்லாமல் இருக்க வேண்டும்.
  • இலங்கைப் பொருளாதாரத்தை அந்நிய செலாவணி ஈட்டியாக மாற்றுவதும் மிகவும் முக்கியமான படியாகும்.
  • அத்துடன் கடன் வாங்குவதையும் நிறுத்த வேண்டும்.