அஞ்சலோ மெத்தீவ்ஸ்கு மீண்டும் வாய்ப்பு

1 year ago
SPORTS
aivarree.com

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்தீவ்ஸ் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான உத்தியோகப்பற்றற்ற ஒருநாள் தொடரில் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் அவருக்கு இடமளிக்கப்படவில்லை.

இறுதியாக அவர் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடினார்.

அணியில் சேர்த்துக் கொள்ளப்படாமைக்கான காரணத்தை கோரி அஞ்சலோ மெத்தீவ்ஸ் சிறிலங்கா கிரிக்கட்டுக்கு கடிதம் ஒன்றையும் வழங்கி இருந்தார்.

இந்நிலையில் இலங்கை வந்துள்ள இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான இலங்கை ஏ அணியில் அவரும் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விபரம்

01) Avishka Fernando

02) Lasith Croospulle

03) Nuwanidu Fernando

04) Angelo Mathews

05) Sadeera Samarawickrama – (WK) – Captain

06) Sahan Arachchige

07) Chamika Karunaratne

08) Praveen Jayawickrama

09) Pramod Madushan

10) Dushan Hemantha

11) Milan Rathnayake

12) Kavishka Anjula

13) Lahiru Udara

14) Nipun Dhananjaya

15) Suminda Lakshan