அண்மையில் எட்டு விமானங்களின் தாமதத்தினால் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு 06 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல விமானங்கள் தாமதம் தொடர்பில் அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தலைமையில் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலந்துரையாடலில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முகாமைத்துவ அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.