ரூபாயின் பெறுமதி அதிகரிப்பு

2 weeks ago
aivarree.com

இந்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 9 வீதம் அதிகமாக உயர்ந்துள்ளது.

அத்துடன், ஏனைய வெளிநாட்டு நாணயங்களுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஜப்பானிய யென்னுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 20 சதவீதமும், பவுண்ட் ஸ்டெர்லிங்கிற்கு எதிராக 11 சதவீதமும் உயர்ந்துள்ளது.

யூரோவுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு 12.6 சதவீதமும், இந்திய ரூபாய்க்கு எதிராக 9.2 சதவீதமும் அதிகமாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.