காஸா சிறுவர் நிதியத்திற்கு நன்கொடைகள் கையளிப்பு

2 weeks ago
Sri Lanka
aivarree.com

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் உருவாக்கப்பட்ட காஸா சிறுவர் நிதியத்திற்கான நன்கொடைகள் நேற்று (26) ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காஸா மோதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Children of Gaza Fund) என்ற நிதியம் ஆரம்பிக்கப்பட்டது.

முதற்கட்டமாக, இந்த ஆண்டு இப்தார் நிகழ்வை நடத்துவதற்கு அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் ஒதுக்கிய நிதியில் இருந்து கிடைத்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை, ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழு மூலம் பாலஸ்தீன அரசாங்கத்திடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் கையளித்தார்.

அத்துடன், “Children of Gaza Fund” நிதியத்திற்கு பங்களிக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய,
அந்த நிதியத்திற்கு பெருமளவான நிதி கிடைத்துள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் குறித்த பணம் உத்தியோகபூர்வமாக பாலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளது.

2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரை மாத்திரமே இந்த நிதியத்திற்கு பங்களிப்பு செய்வதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.