இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஆசிய இணையக் கூட்டமைப்பு கவலை

9 months ago
Sri Lanka
aivarree.com

இலங்கை அரசாங்கத்தின் அண்மைய இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் குறித்து ஆசிய இணையக் கூட்டமைப்பு (AIC) கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் எந்தவொரு பங்குதாரர்களின் ஆலோசனையையும் மேற்கொள்ளாமல் ஆன்லைன் பாதுகாப்பு சட்டமூலத்தை நகர்த்துவதால் ஆசிய இணையக் கூட்டமைப்பு கவலை கொண்டுள்ளது.

இந்த சட்டமூலமானது இலங்கையர்களின் கருத்து சுதந்திரத்தையும், உரிமையினையும் நசுக்குவதற்கான ஒரு வெளிப்பாடு என AIC இன் நிர்வாக பணிப்பாளர் ஜெஃப் பெயின் சுட்டிக்காட்டினார்.

ஆசிய இணையக் கூட்டணியில் Google, Meta (Facebook, Instagram, WhatsApp, Threads), Amazon, Apple, Booking.com, Expedia Group, Goto, Grab, Line, LinkedIn, Rakuten, Spotify, Snap, Shopify, X (Twitter), yahoo போன்றன அடங்கும்.