வர்த்தக வங்கிகளில் டொலர் பெறுமதி

7 months ago
aivarree.com

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று (23) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.

மக்கள் வங்கி : 316.67 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 317.88 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.88 ரூபாவிலிருந்து, 331.15 ரூபாவாக உயர்ந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : 318.18 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 319.66 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.50 ரூபாவிலிருந்து, 330.00 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கி : 320 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி இன்று 321 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 330 ரூபாவிலிருந்து, 331 ரூபாவாக உயர்ந்துள்ளது.