ரஷ்யாவின் அடுக்குமாடி குடியிருப்பு மீது உக்ரைன் வான் தாக்குதல் – 15 பேர் பலி

5 days ago
World
aivarree.com

உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை 2 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகின்றது

அவ்வகையில் ரஷ்யாவின் பெல்கோரட் நகரில் உக்ரைன் நடத்திய வான் தாக்குதலில் 10 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த குடியிருப்பில் வசித்தவர்கள் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளதுடன் மீட்புபணிகள் நடைபெறுகின்றன. இன்று காலை நிலவரப்படி 15 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அருகில் உள்ள குடியிருப்பு கட்டிடங்களும் இடிந்து விழும் என்ற அச்சம் ஏற்பட்ட நிலையில் அந்த குடியிருப்பில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளமை.