இவ்வாண்டில் ரூபாவின் பெறுமதியில் கணிசமான அதிகரிப்பு

7 months ago
aivarree.com

இந்த ஆண்டில் அமெரிக்க டெலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 11.9 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

2023 செப்டெம்பர் 27 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் ஏனைய நாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.

அதன்படி, இந்த வருடத்தின் முதல் எட்டு மாதங்களில் யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட், ஜப்பானிய யென், இந்திய ரூபாய் மற்றும் அவுஸ்திரேலிய டொலர் ஆகியவற்றுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி இந்த தகவலை தெரிவித்துள்ளது.