இராஜதந்திர நகர்வினால் குறைவடைந்த எண்ணெய் விலை

7 months ago
aivarree.com

வாரத்தின் முதல் நாளான இன்று (23) சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை ஓரளவு சரிந்துள்ளது.

இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதலை கட்டுப்படுத்தும் இராஜதந்திர முயற்சிகளால் எண்ணெய் விநியோகத் தடைகள் பற்றிய கவலைகள் தளர்த்தப்பட்டதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சற்று முன்னர் 0.95% குறைந்து, 87.21 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

அமெரிக்க வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் மசகு எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 0.75 சதவீதம் குறைந்து, 91.47 அமெரிக்க டொலர்களாக பதிவானது.

மத்திய கிழக்கில் இஸ்ரேல்-ஹமாஸ் போர் ஒரு பரந்த மோதலாக மாறியமையினால் சாத்தியமான விநியோக இடையூறு ஏற்படும் என்ற அச்சத்தில் கடந்த வாரம் எண்ணெய் விலை 1% க்கும் அதிகமாக உயர்ந்தமையும் குறிப்பிடத்தக்கது.