வர்த்தக வங்கிகளில் டொலர் பெறுமதி

7 months ago
aivarree.com

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளது.

மக்கள் வங்கி: 316.67 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 317.40 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 329.88 ரூபாவிலிருந்து 330.64 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

கொமர்ஷல் வங்கி : 317.52 ரூபாவாக காணப்பட்ட அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 319.17 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 328.50 ரூபாவிலிருந்து 329.50 ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

சம்பத் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்வனவு, விற்பனை பெறுமதி மாற்றமின்றி முறையே 320 ரூபாவாகவும், 330 ரூபாவாகவும் உள்ளது.