இலங்கையில் அதிக முதலீடுகளை மேற்கொள்ள தயாராகவுள்ள IFC

5 days ago
aivarree.com

இலங்கையில் முதலீடுகளை மேம்படுத்த தயாராக இருப்பதாக சர்வதேச நிதிக் கூட்டுத்தாபனத்தின் ஆசிய பசுபிக் துணைத் தலைவர் ரிக்கார்டோ புலிட்டி தெரிவித்துள்ளார்.

இதன் முதற்கட்டமாக 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை சன்ஷைன் ஹோல்டிங்ஸின் துணை நிறுவனத்தின் மருந்து உற்பத்தி திறனை அதிகரிக்கவும், மருந்து வகைகளின் சில்லறை வர்த்தகத்தை விரிவுபடுத்தவும் முதலீடு செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது வணிக துறையை பன்முகப்படுத்த உதவுவதற்காக IFC யின் இரண்டாவது முதலீடு ஆகும்.

மேலும் PickMe, Cargills Ceylon Plc மற்றும் SDB வங்கி ஆகியவை சமீபத்திய ஆண்டுகளில் முதல் பங்கு முதலீடுகளில் ஒன்றாகும். IFC இன் முக்கிய பங்கு முதலீடு 14.45% பங்குகளை Commercial Bank Plc கொணடுள்ளது.

இதேவேளை இலங்கைக்கான IFC இன் செயலூக்கமான நிதி ஆதரவு சுமார் 400 மில்லியன் டொலர்கள் மற்றும் உலக வங்கியின் தனியார் துறை முதலீட்டுப் பிரிவை மேலும் விரிவுபடுத்த விரும்புவதாக புலிட்டி தெரிவித்துள்ளார்.