நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ள சுகாதார தொழிற்சங்கங்கள்

5 days ago
Sri Lanka
aivarree.com

சப்ரகமுவ மாகாணத்தில் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை 04 மணித்தியாலங்களுக்கு சேவைகளை விட்டு விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.

இதேவேளை தமது கோரிக்கைகளுக்கு பதில் கிடைக்காமையால் சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த 09 ஆம் திகதி முதல் மாகாண மட்டத்தில் இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.

மேலும் தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் எதிர்வரும் 21ஆம் திகதிக்கு பின்னர் நாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.