T20 உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இன்று நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளது
இந்தப் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ளது.
அத்துடன் உலகக் கிண்ணப் போட்டிகள் ஜூன் 1ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், இலங்கை அணி விளையாடும் முதலாவது போட்டி ஜூன் 3ஆம் திகதி தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெறவுள்ளது.
எவ்வாறாயினும், இலங்கை அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதில் ஒரு போட்டி இம்மாதம் 27ம் திகதி அமெரிக்கா அணிக்கும், மற்றைய போட்டி இம்மாதம் 30ம் திகதி அயர்லாந்து அணிக்கும் எதிராக நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு போட்டிகளும் புளோரிடாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.