உடனடியாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெற வேண்டும் – தயாசிறி

2 months ago
Sri Lanka
aivarree.com

தேர்தலை நடத்தாமால் உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சபையில் தெரிவித்தார்.

இது குறித்து தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்ததாவது

ஜனாதிபதியின் செயலாளரினால் ஏப்ரல் 29 இன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

உள்ளுராட்சி மன்றங்கள் மூலம் சமுதாயக் குழுக்களை நடைமுறைப்படுத்தும்வகையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் உள்ளடக்கும் வகையில் சமுதாய ஆலோசனைக்குழுவை நியமிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதனூடாக பாரிய தவறு இழைக்கப்படுகின்றது. மூடப்பட்டுள்ள உள்ளுராட்சிமன்றங்களுக்கு மீண்டும் அதிகாரம் வழங்கப்படும் வகையில் உள்ளது. ஆனால் எதிர்த்தரப்பினரின் தலையீடு இல்லாமல் போகின்றது.இவற்றுக்கு மத்தியில் தற்போது ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

இது ஒரு திட்டமிட்ட செயலாகவே தெரிகின்றது. எனவே முதலில் உடனடியாக உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறவேண்டும்” இவ்வாறு தெரிவித்திருந்தார்.