பங்குச் சந்தையில் கணிசமான இலாபம்

7 months ago
aivarree.com

இன்றைய வர்த்தகத்தின் போது கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் கணிசமான இலாபத்தை பெற்றுள்ளது.

அதன்படி, அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 260.11 புள்ளிகளை பெற்று அல்லது 2.46% உயர்ந்து 11,374.64 புள்ளிகளில் நிறைவடைந்தது.

அதேநேரம் S&P SL20 குறியீடு 98.12 புள்ளிகள் அதிகரித்து, 3,050.20 புள்ளிகளாக இருந்தது.

இதேவ‍ேளை 909.95 மில்லியன் ரூபாய் மொத்தப்புரள்வாக இன்று பதிவானது.