பாராளுமன்றத் தேர்தலை விரைவில் நடத்துமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம்

1 month ago
Sri Lanka
aivarree.com

பாராளுமன்றத் தேர்தலை விரைவில் அறிவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழுத்தம் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என நம்பகரமான தகவல் கிடைத்துள்ளமையே இதற்கு காரணம் என குறிப்பிடப்படுகின்றது.

முதலில் பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது தமது கட்சிக்கு நன்மை பயக்கும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குழுவொன்று கருத்து தெரிவித்துள்ளது.

எனவே, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற ஆர்வத்தில் உள்ளனர்.

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும அதைவிடுத்து அவசர பொதுத் தேர்தலுக்கு அழைப்பு விடுக்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.

இதேவேளை, விரைவில் பாராளுமன்ற தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு அறிவிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற சில பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.