விவசாயத் துறையை அபிவிருத்தி செய்வதற்கு 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு

2 weeks ago
aivarree.com

இலங்கையில் விவசாயம் மற்றும் வனப்பாதுகாப்பு திட்டத்திற்காக இணைந்து பணியாற்றுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இலங்கையின் காலநிலை மாற்ற செயலகம் சார்பாக ஜனாதிபதியின் காலநிலை மாற்றம் தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர் ருவான் விஜேவர்தன, மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி, காலநிலை இடர் மன்றத்தின் செயலாளர் நாயகம் மொஹமட் நஷிடி, போர்ச்சுகலின் (Navita Capital) இன் பிரதம நிறைவேற்று அதிகாரி கார்லோஸ் கோமஸ். நிறுவனம், கையெழுத்திட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் 120 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படுவதாக மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அறிவித்தார்.

காலநிலை செழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கையில் அடையாளம் காணப்பட்ட திட்டத்தில் இதுவே முதல் முதலீடாகும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.