2024இல் ஜனாதிபதி தேர்தல் | ரணிலுக்கு அமெரிக்கா ஆதரவு?

1 year ago
Sri Lanka
aivarree.com

2024ஆம் ஆண்டு இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமென, இலங்கை வந்திருந்த அமெரிக்க ராஜதந்திரி விக்டோரியா நுலேண்ட், தம்மை சந்தித்த தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கூறியுள்ளார். 

இதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் போட்டியிடுவார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை ஜனாதிபதி ரணிலின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு அவர் தமிழ்க் கட்சிகளிடம் கோரியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் படிப்படியாக நடக்கும் எனவும் ரணிலுடன் இணைந்து அந்த விடயங்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் தமிழ்த் தரப்பினரை கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஜனாதிபதி ரணிலும் அடுத்ததாக ஜனாதிபதி தேர்தலை நடத்தும் உத்தேசத்திலேயே இருப்பதாக சொல்லப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.