லிட்ரோ எரிவாயு விலை குறித்த அப்டேட்

1 year ago
Gossip
aivarree.com

லிட்ரோ நிறுவனம் தமது எரிவாயு விலையை முன்னர் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் அதிகமாக விலை உயர்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

இதன்படி, 12.5 கிலோ லீற்றர் எரிவாயு சிலிண்டரின் விலை 700-800 ரூபாவால் அதிகரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னர் அதன் விலை 500 ரூபாவால் அதிகரிக்கப்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.  

மேலும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாயில் இருந்து 300 ரூபாவினாலும், 2.3 கிலோகிராம் சிலிண்டரின் விலை 100 ரூபாவினாலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

-அத-