பொலிஸ் காணி அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு | ஜனாதிபதி எடுத்துள்ள திடீர் முடிவு

1 year ago
Sri Lanka
aivarree.com

தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை திடீரென அழைத்து நேற்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கலந்துரையாடினார். 

இலங்கைத் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன் மற்றும் எம். ஏ. சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 

சீ. வி. விக்னேஷ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் போன்றவர்களுக்கும் அழைப்புவிடுக்கப்பட்ட போதும், அவர்கள் கொழும்பில் இல்லததால் சந்திப்புக்கு செல்லவில்லை.

இதன்போது முக்கியமான சில இணக்கப்பாடுகளை ஜனாதிபதி வெளிப்படுத்தியதாக, எம். ஏ. சுமந்திரன் அய்வரிக்கு உறுதிபடுத்தினார். 

ஜனாதிபதியால் இணங்கப்பட்டதாக எம். ஏ. சுமந்திரன் தெரிவித்த சில விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன. 

  • வனவளத்துறை, பாதுகாப்புத்துறை, தொல்லியல்துறை போன்றன கையகப்படுத்திய காணிகளை விடுவிக்கும் வகையில் அமைச்சரவை பத்திரம் ஒன்றை நகர்த்தல். 
  • மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பகிரல் – அதன்படி ஒவ்வொரு மாகாணத்துக்கும் ஒவ்வொரு DIG என்ற அடிப்படையில் மட்டுப்படுத்தல் – அவர்களை மாகாண நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருதல். 
  • குருந்தூர்மலை, தென்னைமரவாடி, திரியாய் போன்ற பூர்வீக தமிழர் எல்லைகளில் அமைக்கப்பட்ட வனவளத் துறை எல்லைக் கற்கள் உடனடியாக நீக்கப்படுதல். 
  • இந்த விடயங்களை உடனடியாக அமுலாக்கும் வகையில் அடுத்தக்கட்ட சந்திப்புகளை துரிதமாக மேற்கொள்ளல். 

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கை வந்து திரும்பிய நிலையில், ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.