பணமில்லை என்ற அரசின் அறிவிப்பை புறந்தள்ளிய பாகிஸ்தான் – உச்ச நீதிமன்றம் தேர்தலை நடத்த உத்தரவு

1 year ago
World
aivarree.com

பணமில்லை என்ற பாகிஸ்தான் அரசாங்கத்தின அறிவிப்பை புறந்தள்ளிய அந் நாட்டு உச்ச நீதிமன்றம், பஞ்சாப் மற்றும் கைபர் பக்துன்க்வா ஆகிய மாகாண சட்ட சபைகளுக்கான தேர்தலை 90 நாட்களுக்குள் நடத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

பஞ்சாப் மாகாண சட்டமன்றம் 2023 ஜனவரி 14 ஆம் திகதி கலைக்கப்பட்டது. கைபர் பக்துன்க்வா மாகாண சட்டமன்றம் 2023 ஜனவரி 18 ஆம் திகதி கலைக்கப்பட்டது.

பாகிஸ்தானின் அரசியலமைப்பின்படி, மாகாண சட்டசபை கலைக்கப்பட்ட பின்னர் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எனினும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பணவீக்கமானது அரசியலில் பாரிய உறுதியற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் தேர்தலுக்கு நிதி வழங்க நிதி அமைச்சகம் மறுத்தமையினால் பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் திகதிதயை நிர்ணயம் செய்ய தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.