சுற்றுலா பயணிகளின் வருகை 50 வீதத்தால் குறையும் அபாயம்

2 weeks ago
aivarree.com

சுற்றுலா விசாவிற்கு இலங்கை அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிப்பதன் காரணமாக இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சுமார் 50 வீதத்தால் குறையும் அபாயம் உள்ளதாக இலங்கை பயண முகவர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

தற்போது சுற்றுலா விசாவிற்கு 100.77 டொலர்களை இலங்கை வசூலிப்பதாகவும், விசா கட்டணம் 50 டொலர்களாக இருந்த போது வெளிநாட்டவர்கள் அதிகளவில் வந்ததாகவும் அந்த சம்மேளனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு நபருக்கு 30 நாள் வீசாவிற்கு அதிகபட்சமாக 50 டொலர்களை அறவிடுமாறு ஏற்கனவே அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த நாட்டில் சுற்றுலாவின் மூலம் வெளிநாட்டு நாணயத்தை ஈட்ட வேண்டுமாயின் அவ்வாறான கட்டணங்கள் இருக்க வேண்டும் எனவும் குறித்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.