ஒரே நாளில் 4 ரூபாவால் வீழ்ந்த அமெரிக்க டொலர் பெறுமதி

1 year ago
Sri Lanka
aivarree.com

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது, கொள்வனவு வீதம் 351.72 ரூபாவாகவும், விற்பனை விலை 362.95 ரூபாவாகும் பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம் விற்பனை விலையானது 366.92 ரூபாவாக காணப்பட்ட நிலையில் இன்றைய தினம் அது 4 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த 2022 மே 04 ஆம் திகதிக்கு பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிரான மிகக் குறைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி இதுவாகும் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தகத்கது.